BREAKING NEWS

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

 

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாத்தூரில் பெரியநாயகி சமேத மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாக குடமுழுக்கு திருப்பணிகள் பல லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது.

 

 

இந்நிலையில் திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் கடந்த 10ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று காலை நான்காம் காலபூஜை நிறைவுப்பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.

 

 

பின்னர் விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )