விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.வழங்கினார்.

ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆடுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் /கணவனால் கைவிடப்பட்ட/ ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் விழா ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், அவர்கள் தலைமையில் இன்று(22.09.2022) நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள்/ செம்மறியாடுகள் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 25 பெண்களுக்கும், ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 25 பெண்களுக்கும் வழங்கினார். இவ்விழாவிற்கு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் கலந்து கொண்டு தமிழக கூட்டுறவுத்துறை பேசியதாவது.
தமிழகத்தில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்/கணவனால் கைவிடப்பட்ட/ ஆதரவற்ற பெண்களுக்கு, 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் /செம்மறியாடுகள் வழங்கி, பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் 2021-2022-ஆம் ஆண்டிற்கு, தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1,400 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு ஆடுகள் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு ரூ. 19,115 வீதம் ஒரு ஒன்றியத்திற்கு 100 பயனாளிகளுக்கு ரூ.19,11,500/-திட்ட செலவினம் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர், அந்தந்த கிராம ஊராட்சிகளில் நிரந்தர முகவரியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவர்.
அந்த வகையில் ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் மற்றும் ஆத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் ஒவ்வொரு பயனாளிக்கும் 5 வெள்ளாடுகள் /செம்மறியாடுகள் வீதம் மொத்தம் 1000 ஆடுகள் ரூ.38.23 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாடுகள் /செம்மறியாடுகள் வழங்கப்படுகின்றன.
இங்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் வகையில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு, 25 பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் /செம்மறியாடுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து, ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 25 பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் /செம்மறியாடுகள் வழங்கி, பயனாளிகளிடம் ஆடுகளை நல்ல முறையில் வளர்த்து தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார் .
மேலும் இந்நிகழ்ச்சியில உடன் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சிவகுருசாமி, ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜேஸ்வரி,
ஆத்துார் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் முருகன், உதவி இயக்குநர்கள் திருவள்ளுவர், விஜயகுமார், கேசவன், திண்டுக்கல்(மேற்கு) வட்டாட்சியர் ரமேஷ்பாபு, ஆத்துார் வட்டாட்சியர்(பொ) நிர்மலா கிரேசி, முக்கிய பிரமுகர்கள் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
