அதிமுக என்பது ஒரு தொடர்வண்டி போல அது யாருக்காகவும் நிற்காது ஓடிக்கொண்டே இருக்கும் இதில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் இறங்க வேண்டும் என்பவர்கள் இறங்கிக் கொள்ளலாம் தஞ்சை பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் பேச்சு.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகை செல்வன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் எடப்பாடி பழனிச்சாமி ஏன் தலைமை ஏற்க வேண்டும் என்றால் அவர் ஜனநாயக முறைப்படி பொதுக்குழு உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 98 சதவீதம் பேர் எடப்பாடியை ஆதரிக்கின்றனர்.

அண்ணா திமுகவை தலைமை ஏற்பவர்கள் திமுகவை எதிர்ப்பவராக இருக்க வேண்டும் அப்படி திமுகவை எதிர்ப்பவர் எடப்பாடி மட்டும்தான் அவர்தான் அண்ணா திமுக தலைமை ஏற்க வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் பேசிய அதிமுக தலைமை கழக பேச்சாளர் வைகைச் செல்வன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ரயில் போன்றது இதில் யார் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் யாரும் வருவார்கள் என்பதற்காக ரயில் நிக்காது.

50 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் அதிமுக ரயில் யாரும் வருவார்கள் என எதிர்பார்க்காத அது தன் வழியில் ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளுங்கள் இறங்குபவர்கள் இறங்கி விடுங்கள் யாரும் வரவில்லை என கவலைப்படுவது கிடையாது.
