BREAKING NEWS

மருதாநதி அணையிலிருந்து பாசன வசதிக்காக மருதாநதி அணை திறப்பு. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

மருதாநதி அணையிலிருந்து பாசன வசதிக்காக மருதாநதி அணை திறப்பு. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ரஜா.

 

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே மருதாநதிஅணை உள்ளது. அணையின் நீர்மட்டஉயரம் 74 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 72 அடி கொள்ளளவு உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு அணையை திறக்க உத்தரவிட்டார்.

 

அதை தொடர்ந்து அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்பட அப்பகுதியில் உள்ள 6500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படும் வகையில் மருதாநதி அணையினை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பட்டனை அமுக்கி திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து மலர் தூவி வணங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில் அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளிடம் பேசுகையில்,..

 

 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று முதல் போகத்திற்கு மருதா நதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே குறிப்பிட்ட காலத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் வைகை அணை மஞ்சளார் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் திறக்கப்பட்டுள்ளன. காரணம் விவசாயிகள் தேவைக்காக தான். முதல் போகத்தில் இந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த அணையின் நீர் திறப்பால் பயன்பெறுவார்கள்.

 

 

ஆத்தூர் அணை மற்றும் மருதாநதி அணை சுற்றுலா தளமாக மாற்ற முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும், நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மருதாநதி அணை உதவி பொறியாளர் கண்ணன், மற்றும் அதிகாரிகள், தி.மு.ககட்சியினர் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )