BREAKING NEWS

திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். 

 

 

காசியை விட வீசம் அதிகம். தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறைக்கு உண்டு என்பது ஐதீகம், மாதம் தோறும் வரும் அமாவசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

 

அதன்படி புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை. உள்ளிட்ட பொருட்களை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி,

 

 

மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானுக்கு தீபம் காட்டி வழிப்பட்டு தங்கள் கடமையை நிறைவேற்றினர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தர்ப்பணம் செய்தனர்.

 

 

தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து காவிரி கரையில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்து சென்றனர்.

 

 

இதனையொட்டி ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )