எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி, தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகள்,
மற்றும் கிராமப்புற தொடர்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில் எச்.டி.எப்.சி வங்கியின் மண்டல அதிகாரி வசந்தன், கிளை மேலாளர் சந்தோஸ்குமார், உதவி மேலாளர்கள் ஹரிகிரு்ணன், திருமூர்த்தி, பிரேம்குமார், சதீஸ்குமார், சந்தோஸ்குமார் உள்ளிட்டோர் உள்ளனர்.
CATEGORIES மயிலாடுதுறை
