BREAKING NEWS

பெரியகுளத்தில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெரியகுளத்தில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 பி.எப்.ஐ, எஸ்டிபிஐ. கட்சி அலுவலகங்கள் மற்றும் உறுப்பினர்களை சோதனை என்ற பெயரில் அத்துமீறி கைது செய்ததாக, என்ஐஏ மற்றும்

 

 அமலாக்கத்துறையைக் கண்டித்து, தேனி மாவட்டம், பெரியகுளத்தில், இஸ்லாமியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த எழுபத்தைந்து பெண்கள் உட்பட, சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர், முகமது உஸ்மான் அலி தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கண்டன முழக்கங்களையும், கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.

 

 

நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தியும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்தவர்களில் சிலரை கைது செய்ததை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் கீதா தலைமையில், துணைத் கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஆய்வாளர்கள் மீனாட்சி, சிவக்குமார் உட்பட, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )