பேருந்து நடத்துனரின் மகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் மாணவிக்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா நேரில் சென்று வாழ்த்து.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வெள்ளாங்குழி தனியார் பேருந்து நடத்துனராக பணிபுரியும் V.K.பாலாஜி அவர்களது மகள் வெள்ளாங்குழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று அரசு மருத்துவக்கல்லூரியில் மெரிட்டில் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவி B.திரிஷா அவர்களை,
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இசக்கி சுப்பையா MLA அவர்கள் மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் .
உடன் அம்பாசமுத்திரம் ஒன்றிய கழக செயலாளர் துர்க்கை துரை,வெள்ளாங்குழி கிளை செயலாளர் மாசாணம், ஆணையப்பன்,
மாவட்ட கலை பிரிவு செயலாளர் மின்னல் மீனாட்சிசுந்தரம், அம்பாசமுத்திரம் நகராட்சி முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் KSR.மாரிமுத்து, பட்டை ராமச்சந்திரன் செயலாளர் பிராங்கிளின் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அதிமுகஅம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையாஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்