கடலூர் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் கால் முறிந்தது.!
வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி வயது 75 த/பெ கோவிந்தசாமி, இன்று காலை 08.00 மணி அளவில் தனது வீட்டின் அருகில் உள்ள முத்துக்கருப்பன் த/பெ ராமசாமி என்பவரது வீடு அருகே சிறுநீர் கழிக்க சென்றார், அப்போது ராமசாமியின் கூரை இடிந்து விழுந்ததில் பெரியசாமியின் வலது கால் முறிந்து அலறி துடித்தார்.
பின்னர் கிராமத்தினர் அவரை மீட்டு வேப்பூர் அரசு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
CATEGORIES கடலூர்