சனாதன,சங்பரிவார் கும்பலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளுவர், பெரியாரை தொடர்ந்து, சட்ட மேதை டாக்டர் அம்பெத்கர் உருவ படத்திற்கு காவிஉடை உடுத்தியும், திருநீறு, குங்குமம் இட்டு அவமதித்த சனாதன, சங்பரிவார் கும்பலை கண்டித்துவிடுதலை தசிறுத்தைகள் க ட்சி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல் திருமா வளவன் ஆணைக்கிணங்க தமிழ் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் இரயில் நிலையம் அருகே திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சித்தார்த்தன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்,..
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஒரகடம் குமணன் முன்னிலையில் அரசியல் குழு மாநிலசெயலாளர் டாக்டர் பாவலர் நீல வானத்து நிலவன், ஆணழகன் துரை அம்பேத்கர் வாசன்,மண்டல செயலாளர், கெளதமன் கோபு, மாஸ்டர் அருண் கெளதமன் கோபு, தளபதி சுந்தர், மணி, பாவலர் மதிவாணன் மற்றும் மாநிலபொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காண்டன கோஷங்ளை எழுப்பினர்.