BREAKING NEWS

திமுக அரசை கண்டித்து வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.

திமுக அரசை கண்டித்து வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள் கோயில்  பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.

 மாவட்ட செய்தியாளர்  செங்கைஷங்கர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்களித்த மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 

 

அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் மாவட்ட ஒன்றிய குழு தலைவருமான கஜா என்கிற கஜேந்திரன் தலைமையிலும் காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் குணா என்கிற குணசேகரன் தலைமையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

 

 

தமிழகத்தை திமுக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் தற்போது பால்விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, கட்டாய அநியாய வீட்டுவரி உயர்வு இப்படி அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்தும் உயர்ந்துள்ளது.

 

 

ஆகவே மின்சார உயர்வை குடிநீர்உயர்வை திரும்ப பெற வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னைய்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என 300க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )