BREAKING NEWS

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை கிழக்குறிச்சி ஊராட்சி பகுதியில் நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

 

 

பொதுமக்கள் வைத்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியில் நியாய விலை கடை திறந்து வைக்கப்பட்டது.

 

அதனை தொடர்ந்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காலை உணவை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கினார்.

 

 

இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன், கிழக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )