BREAKING NEWS

தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயம் ஆய்வு

தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயம் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பழமை வாய்ந்த டேனிஸ் கோட்டை மற்றும் புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை. பொதுக் கணக்குக்குழு உறுப்பினர்கள்,

 

காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனை செல்வன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ரு.கே.மாரிமுத்து, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஆகியோர் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

உடன் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், பொதுக் கணக்குக் குழுச் சார்புச் செயலாளர் பாலசீனிவாசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

 

CATEGORIES
TAGS