BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

தஞ்சை சேப்பனாவாரியை சேர்ந்தவர் ரகுராஜ் மகன் ரகுபதி (வயது19) பெயிண்டர். இவரும் தஞ்சை இந்திரா நகரை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ரகுபதி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணிடம் தனிமையில் இருந்துள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இதனை அறிந்த பெற்றோர் மகளை கண்டித்தனர்.


இதுகுறித்து அந்தப் பெண் தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )