BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வரும் மார்ச் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியா் அறிவிப்பு.

மாசிக்கொடை திருவிழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மிகவும் பிரசத்தி பெற்றது. இக்கோவில் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 6ஆ திருவிழா நேற்று காலையில் தீபாராத னையும் காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பகல் 12 மணிக்கு யானை மீது களப பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது.

மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனியும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்ற மகா பூஜையும் நடைபெற்றது. பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மார்ச் 8ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) மாசிக்கொடை திருவிழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )