திருக்கருகாவூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மேற்கு மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள்விழா பொதுக் கூட்டம்
திருக்கருகாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் தலைமை வகித்தார். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அவைத்தலைவர் ராம்குமார், மாவட்ட பொருளாளர், மாவட்ட இளைஞரணி, ஒன்றிய செயலாளர்கள் , ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் , தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசினர்.
மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை தலைவர் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள்விழா பொதுக் கூட்டம்தஞ்சாவூர்தமிழ்நாடுதிருக்கருகாவூரில் நடைபெற்றதுதிருச்சி மாவட்டம்