BREAKING NEWS

கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியிணை அரசியல் சுவரொட்டியாக பொதுமக்கள் புரிந்து கொள்கின்றனர்.தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க என்று கூறியிருப்பதாகவும் அவர்கள் தெளிவாக கூறுகின்றனர்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குள் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வருகிறது இதற்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் எம்பி ஆக உள்ளார்.ஆனால் இந்த தகவல் நன்கு படித்து பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு கூட மறந்து விட்டது. ஏனென்றால் அவர் எப்போதுமே தொகுதி பக்கம் எட்டிப் பார்த்ததே கிடையாது.எனவே பொதுமக்கள் உண்மையாகவே தங்கள் தொகுதி எம்பி யார் ? என்பதை மறந்து விட்ட நிலையில் கண்டா வரச் சொல்லுங்கள் என்ற போஸ்டர் ஒட்டியுள்ளது உண்மைதானே என்று கூறுகின்றனர்.

மேலும் இந்த போஸ்டரை மாற்று கட்சியினர் ஒட்டி இருக்கிறார்களா அல்லது சொந்த கட்சிக்காரர்களே அரசியல் உள்நோக்கத்தோடு ஒட்டி இருக்கிறார்களா என்பது புரியாத புதிராக இருக்கிறது.

CATEGORIES
TAGS