BREAKING NEWS

தேனி மாவட்டம் கம்பம் அருகே திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் சொந்த ஊரான நாராயண தேவன் பட்டியில் டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆர்கே நகர் தொகுதியில் என்னை பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த என்னை எனது சொந்தத் தொகுதி போல் பணியாற்றி இந்த தேனி தொகுதியில் ஒருவருடன் ஒருவராக கலந்து கொள்ள என்னை மாபெரும் வெற்றி பெறச் செய்வீர்கள் என எனக்கு தெரியும்

நாராயணத் தேவன் பட்டியில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்வீர்கள் எனவும் எனக்கு தெரியும்

இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டு வருபவர்கள் ஒரிஜினல் கிடையாது அவர்கள் போலிகள்.

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை நீங்கள் இந்த தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

பிரச்சாரத்தின் போது நாராயண தேவன் பட்டியில் 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை, இரவு நேரங்களில் அதிக அளவு மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படுகிறது, ஊராட்சித் தலைவர் தலைமையில் இயங்கும் இந்த கிராமத்தில் நான்கு பகுதிகளிலும் சுத்தமில்லை, தேனி மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற சுருளி அருவியில் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது, கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது இளைஞர்கள் பாதிப்பு அடைகின்றனர், உள்ளிட்ட கோரிக்கைகளை டிடிவி தினகரன் முன்பு ஊர் பொதுமக்கள் ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்தனர்.

அதற்கு டிடிவி தினகரன் கூறுகையில் திமுகவும் மின்சார தட்டுப்பாடும் இரண்டும் ஒன்றையும் பிரிக்க முடியாது, நான் பாராளுமன்றத் தொகுதியில் வென்றால் சுருளி அருவியில் முன்பை போல் இலவசமாக அனுப்ப அனுமதி வழங்குவதற்கு வழிவகை செய்வேன்,

அரசின் துணையோடு கஞ்சா விற்பனை நடைபெறுவதால் இளைஞர்கள் நாசமாகிறார்கள் என்று பாரதப் பிரதமர் மோடியே பேசி உள்ளார்.

நான் வெற்றி பெற்றால் இந்த ஊர் கொடுத்த கோரிக்கைகளை உறுதியாக நிறைவேற்றித் தருவேன் என்று பேசினார்

CATEGORIES
TAGS