பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் தெற்கு ஒன்றியக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ப.பாபு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது .
வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திரு ப.பாபு.
அதிகாலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மயிலாடுதுறை மாவட்ட பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குத்தாலம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட கடகம் முத்தூர் பெரம்பூர் சேத்தூர் எடக்குடி மலக்குடி மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தி அப்போது அவர் துண்டு பிரசுரம் உங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் குத்தாலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என் இளங்கோவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.