BREAKING NEWS

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம்,2024 ஆம் ஆண்டு டைம்ஸ் உயர் கல்வி தரவரிசையில்
நிலையான வளர்ச்சி இலக்கு – 3: ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் இன்று கல்லூரி அரங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறும் போது ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம், மைசூரு,
2024 ஆம் ஆண்டு டைம்ஸ் உயர் கல்வி தரவரிசையில் நிலையான வளர்ச்சி இலக்கு – 3: ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம், மைசூரு, கர்நாடகா, இந்தியா (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து முயன்று வருகிறது.

உலகளவில் மதிப்புமிக்க டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை-2024-ல் தனது குறிப்பிடத்தக்க சாதனையை அறிவிப்பதில் ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம் பெருமிதம் கொள்கிறது.

இதன் மூலம் ஜெ எஸ் எஸ் நிகர் நிலை பல்கலைக்கழகம் உலகளவில் முதன்மையான நிலையை உறுதிப்படுத்தும் விதமாக நிலையான வளர்ச்சி இலக்கு – 3: ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் ‘உலக தரவரிசையில் முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகளில் இலக்கு – 3 ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதிலும், அனைவருக்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

மேலும், ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம், மைசூரு மற்ற நிலையான வளர்ச்சி இலக்குகளில் பெற்றுள்ள தரவரிசைகள், உலகின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்வதில் பல்கலைக்கழகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

சுகாதாரம், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சமூக நல முயற்சிகளை மேம்படுத்துவதில் பல்கலைக்கழகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றன.

தரமான சுகாதாரக் கல்வி, மாற்று ஆராய்ச்சிகள், பழங்குடியினர் நலம் சார்ந்த திட்டங்கள் மற்றும் ஏழைகளுக்கான சுகாதார சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சிறந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்குக் கிடைத்த மற்ற தரவரிசை இடங்கள்:
நிலையான வளர்ச்சி இலக்கு –
7 : மலிவு மற்றும் சுத்தமான ஆற்றல் – தரவரிசை 12
1 : வறுமை இல்லை – தரவரிசை 21
15 : நிலத்தில் வாழ்க்கை – தரவரிசை 49
6 : சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் – தரவரிசை 60

ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம், மைசூருவின் வேந்தர் ஜெகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மஹாசுவாமிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் இத்தகைய குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தனது மனமார்ந்த ஆசிகளை வழங்கியுள்ளார்.

ஜெ எஸ் எஸ் மகாவித்யாபீடத்தின் நிர்வாகச் செயலாளர் டாக்டர். சி ஜி பெட்சுர்மத், & செயலாளர் I திரு எஸ் பி மஞ்சுநாத், ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகத்தின் இணை வேந்தர் டாக்டர் பி சுரேஷ், துணைவேந்தர் டாக்டர் சுரீந்தர் சிங், மற்றும் பதிவாளர் டாக்டர் பி மஞ்சுநாத் ஆகியோர் பல்கலைக்கழகத்தின் சாதனைகளுக்கு பெருமை தெரிவித்து, இந்த சாதனைகளை அடைவதற்கான முயற்சிகளை மேற்கோண்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம், மைசூரு ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என கூறினார்.

CATEGORIES
TAGS