காட்பாடியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தாராபடவேடு, சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் மின் கட்டணம் உயர்வு, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை நிறுத்த முயலும் திமுக அரசை கண்டித்து, பல்வேறு சட்டம் ஒழுங்கு சாமானிய பொதுமக்கள், காவல்துறையில் சட்டம் ஒழுங்கு அரசு விதிமுறைப்படி பின்பற்றாமல் சாமானிய மக்களை அச்சுறுத்தி வரும் அரசை கண்டித்தும், போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பை கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் அதிமுக நட்சத்திர பேச்சாளர் கோபி காளிதாஸ் கலந்து கொண்டு கண்டனப் பேருரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணியினர், மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.