BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரம்-அரசு உள்ளூர் மாவட்ட நகரப் பேருந்துகளை பள்ளி நேரத்திற்கு இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை.

ஒட்டன்சத்திரம்-அரசு உள்ளூர் மாவட்ட நகரப் பேருந்துகளை பள்ளி நேரத்திற்கு இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் ரோடு ,புதிய பைபாஸ் ரோடு, கொல்லப்பட்டி, விட்டல் நாயக்கம்பட்டி வழியாக ஸ்ரீரங்க பெருமாள் கவுண்டன்புதூர் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஸ்ரீரங்க பெருமாள் கவுண்டன் புதூரில் இருந்து காலை ஒன்பது முப்பது மணிக்கு இயக்கப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் அந்த பஸ்சை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அந்த அளவு பணம் செலவு செய்ய இயலாதவர்களே. மேலும் அந்த வழியே இயங்கி வரும் தனியார் மினிபஸ்சும் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே பள்ளி செல்ல வசதியாக காலை எட்டு முப்பது மணிக்கு பேருந்துகளை இயக்கினால் கிராமப்புற ஏழை மாணவர்களும்,வயோதியர்களும், வேலைக்குச் செல்லும் பெண்கள், மருத்துவமனைக்கும் செல்லும் நோயாளிகள் பலர் பயன் பெறுவர்.அதேசமயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )