BREAKING NEWS

சினிமா

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியிட தடை !

சென்ற ஆண்டு சூர்யாவின் தத்ரூப நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது. அதே சமயம் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவு செய்துள்ளதாக பல போராட்டங்களை மேற்கொண்டனர்.

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் தானாக முன்வந்து தனது வருத்தத்தை தெரிவித்த பின்னரே போராட்டங்கள் நிறுத்தப்பட்டது. தற்போது சூர்யா நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை வெளிஆக உள்ளது.

இதையடுத்து இந்த படத்தை கடலூர் மாவட்ட திரை அரங்குகளில் வெளியிட விடமாட்டோம் என பல எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

மேலும் சூர்யா ஜெய்பீம் படத்திற்காக மன்னிப்பு கூறினால் மட்டுமே படத்தை வெளியிட விடுவோம் என பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் வீட்டில் எதற்கும் துணிந்தவன் படத்தின் எதிர்ப்புகளை அடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )