தலைப்பு செய்திகள்
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்!!

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நிறைவுபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகும் வரும் நிலையில், 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை அடைந்துள்ளது.
ஏற்கனவே, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில், மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
