BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திராவிட இசைக் கருவியான “நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு” 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.


திராவிட இசைக் கருவியான “நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு” 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என
தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

17 ம் நூற்றாண்டிலிருந்து தஞ்சையில் புகழ்பெற்று வரும் திராவிட இசைக்கருவியான நாதஸ்வரம் கடினமான இசைக்கருவியாக இருந்த நிலையில், 1955 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகில் உள்ள “நரசிங்கம்பேட்டை” கைவினைக் கலைஞர் ரங்கநாத ஆச்சாரி எளிமையாக வாசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்.


தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டையில் தற்போது 20 குடும்பங்களை சேர்ந்த இசைக்கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு இசைக்கப்படும் பாரம்பரிய இசைக்கருவி ஆகும் ஆச்சாமரம் எனும் வகை மரத்திலிருந்து பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது

300 ஆண்டுகள் பாரம்பரியமாக இசைக்கப்படும் நாதஸ்வரத்திற்கு 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி
பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் ராஜரத்னம் பிள்ளை வாசித்து உலகப்புகழ்பெற்றவை நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என்றவர்,

ஏற்கனவே தஞ்சை வீணை, தஞ்சை ஓவியம் உள்ளிட்ட 9 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில்

நாதஸ்வரத்துடன் சேர்த்து 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்த மாவட்டமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது என்றார்நாதஸ்வரம், வழக்கறிஞர் சஞ்சய் காந்தி.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )