BREAKING NEWS

சினிமா

தொடங்கியது ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட்.

தொடங்கியது ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட் !

’எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து, பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார், சூர்யா. இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலைத் தழுவி உருவாகும் இந்தப் படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பாக, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டில் சூர்யா, வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. வெற்றிமாறன், சூர்யா, தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு செட்டில், மாடு பிடி வீரர்கள், மாடுகள் வரும் வாடிவாசல், பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் மாடம் போன்றவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு நடிகர், சூர்யா, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )