BREAKING NEWS

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாளை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மிலிட்டரி பிரகாஷ் தலைமையிலும் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அவரது திரு உருவப் படத்திற்கு மலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்சியில் மாவட்ட ஒன்றிய நகர அமமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு முன்னால் முதல்வர் ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

CATEGORIES