தஞ்சாவூரில் தந்தையை இழந்த பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்கான உதவித்தொகையை போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்

தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி 38 மற்றும் 39ம் வார்டை சேர்ந்த தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினமும் காலையில் விலையில்லா தேநீர் – பலகாரம் வழங்கும் திட்டம் மற்றும் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விலையில்லா புத்தாடைகள் , விலையில்லா மளிகை தொகுப்பு , விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் மற்றும் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந் நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பண்டிகை கால வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அவர்களுக்கு விலையில்லா அரிசி , புத்தாடைகள் , மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கி வாழ்த்தி பேசும்போது பொது இடங்களில் தூய்மையை பேணிக்காப்பது, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுவது மற்றும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி இவர்கள் மேற்கொண்டு வரும் துப்புரவுப் பணி, மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் செங்கிப்பட்டி அருகே சானூரப்பட்டி பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த இரு பெண் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் வண்ணம் பெண்களின் தாயிடம் கல்வி நிதிஉதவி வழங்கப்பட்டது .இதில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , சஞ்சய் காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்
