BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நாகர்கோவில் புளியடி பிரம்மசக்தி மயான மாசன சுடலை கோவில் சுற்றுவட்டார பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என கோயில் நிர்வாகிகள் வேண்டுகோள்!

நாகர்கோவில் புளியடி பிரம்மசக்தி மயான மாசன சுடலை கோவில் சுற்றுவட்டார பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என கோயில் நிர்வாகிகள் வேண்டுகோள்!

புராண காலத்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அவர்களின் அங்க அடையாளங்கள் கோவில் திருப்பணிக்காக தொண்டப்பட்ட போது தென்பட்டதாகவும் அவைகள்
8 அடி,10 அடி உயரம் கொண்ட மனிதர்களின் ராட்சச எலும்புக்கூடுகளாக காணப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இருந்து புத்தேரி நோக்கி செல்லும் போது இடது புறமாக புத்தேரி பாலம் கிழே இரயில்வே தண்டவாளத்தை தாண்டி ஒருகிலோ மீட்டர் தாண்டி சென்றால் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் புளியடி பகுதியில் அமைக்கப்பட்ட அமிர்தவனம் என்ற மின்சார சுடுகாடு காணப்படும்,

அதன் முன்பு ஆற்றின் பாலம் வழியாக அமிர்தவனம் என்று சொல்லக்கூடிய மின்சார சுடுகாடு பின்புறம் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரம்ம சக்தி மயான மாசான சுடலை ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது, இக்கோயிலில் ஆடி அமாவாசை கொடை, மாசி கொடை என மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மிகச்சிறப்பாக மாடசாமி சுவாமிக்கு தீபாரதனை நடைபெறும், அதேபோன்று சுவாமியை வழிப்பட்டு சென்ற பக்தர்கள் நினைத்த காரியங்களை சுவாமி நடத்திக் கொடுக்கும் நேரத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்,

இந்நிலையில் சுவாமியின் அருள் அனைத்து பக்தர்களுக்கும் சென்று கிடைத்து வருகிறது,சுவாமி 12 அடி உயரத்தில் கல் சிலையில் காட்சி அளிக்கிறார்.அதன் சுற்றுவட்டார பகுதி மயான அமைதியாக கொண்டு உள்ளது, மேலும் அப்பகுதியில் 25 அடி உயரத்திற்கு பத்ரகாளியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த கோயிலின் வரலாற்றை நாம் திரும்பி பார்த்தோமானால் அது பிரமிக்க வைக்கிற அளவுக்கு உள்ளது மேலும் இக்கோயில் தலத்தை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்,

அது பற்றி கூறுகின்ற போது நம்மை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு பேசுகிறார், காரணம் புராண காலத்தில் நாம் படித்து அறிந்த மனிதர்களின் உடல் அமைப்புகள்,வான் உயர்ந்த மனிதர்கள் உயரங்களும் குறிப்பிட்டுச் சொன்னால் மகாபாரதத்தில் பீமன், கர்ணன், ராமாயணத்தில் ஆஞ்சநேயர், வாலி என்று வியக்கத்தக்க புராண காலத்தில் வாழ்ந்த கடவுள்கள் மனிதர்கள் என்று அறியப்பட்டு உள்ளோம் ஆனால் அது மனிதர்களின் எண்ண ஓட்டத்திலும் புராணக்கதைகளில் பதியப்பட்டுள்ளது, இந்நிலையில் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் இக்கோயிலின் கட்டுமானப் பணிக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் அவர்களின் பாராளுமன்ற நிதியிலிருந்து இக்கோயிலின் கலையரங்கம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது, பின்னர் பணியும் நடைபெற்று வந்த நிலையில் பீம் என்று சொல்லும் நிலை தூண் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பிரம்மிக்க வைக்கின்றன ,
ராட்சச எலும்புக்கூடுகள் காணப்பட்டுள்ளது,

மேலும் நான்கு பக்கம் தூண் நிலை பீம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் வரிசையாக இதைப் போன்று 10 அடி 12 அடி இருந்த மனிதர்களின் உயரத்திற்கு ஏற்ப அகல மண்டை ஓடுகள்,நீண்ட கைகால் எலும்பு கூடுகள் என்று காணப்பட்டுள்ளது, மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது, அதேபோன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அடிப்பகுதியில் அமிர்தவனம் என்று சொல்லக்கூடிய மின்சார சுடுகாடு கட்டுமான பணியின் போது அப்பகுதியில் காணக்கிடைக்காத அளவிற்கு மணல்களில் இருந்து மனித எலும்புக் கூடுகளில் மோதிரம்,கம்மல்,செயின் அணிந்த நிலையில் எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது,அந்த நேரத்தில் கட்டுமான பணியின் போது அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் சமாதி அமைக்கப்பட்டு இருந்திருப்பதாக தெரியவந்துள்ளது, இதை அறிந்த மக்கள் பலர் அப்பகுதியில் உள்ளனர், ஆனால் அங்கு சமாதி அமைக்கப்பட்டிருந்ததாக யாரும் இதுவரை அறிந்தது இல்லை,பல தலைமுறைகளாக இங்கு யாரும் தங்களின் முன்னோர்கள் சமாதி இருப்பதாக வந்தது இல்லை,இதுபற்றி கேள்விப்பட்டதும் இல்லை என்று தான் அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் கூறி வருகின்றனர், ஆனால் அவர்கள் இப்பகுதி புராண காலத்தில் ஒரு போர் தளமாகவும் இருந்திருக்கலாம் என்வும் அல்லது போரில் இறந்தவர்களை அடக்கம் செய்கின்ற ஒரு பகுதியாகவும் இருந்திருக்கலாம் என கூறுகின்றனர், மேலும் இப்பகுதியை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தும் போது புராணகால மனிதர்களை வாழ்வியல் முறைகளை இங்கு கண்டறியலாம் என்றும் இந்த மயான மாசன சுடலை கூட யாரும் நிறுவ வில்லை, எப்படி வந்தது என்று கூட இன்னும் இதற்கு முன்பு இருந்த தலைமுறைகளுக்கு கூட தெரியவில்லை பண்டு தொட்டு வந்து கொண்டிருக்கின்ற இந்த கோவில் பல்வேறு அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கொடுத்து வருகின்றது,இந்த இறைவனை வேண்டி சென்றவர்களுக்கு நினைத்த காரியங்களை அள்ளிக் கொடுக்கின்ற மகானாக கடவுள் பாவித்து வருகிறார். இக்கோயில் அமைந்து இருப்பது அதிகபட்ச நபர்களுக்கு தெரியாத நிலையில் தான் உள்ளது, தெரிந்து வருபவர்கள் நினைத்த காரியத்தை நடைப்பெற்றால் மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்கின்றனர்,அப்படி பலர் இக்கோவிலுக்கு வருகின்றனர், அதுவே இக்கோயிலை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்று இக்கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )