BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்  கரிகாலப்பாண்டியன் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு அரைப்பவுன் தங்க மோதிரம் வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலப்பாண்டியன் நிலக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு அரைப்பவுன் தங்க மோதிரம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 69 -வது பிறந்த நாளை இன்று திமுக-வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெ.கரிகாலப்பாண்டியன் தலைமையிலான திமுக-வினர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் புத்தாடை பழங்கள் உட்பட ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர்.

மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் கர்ப்பிணிகளுக்கு புத்தாடை மற்றும் பழங்கள் அடங்கிய ஊட்டசத்து பெட்டகம் வழங்கினர் தொடர்ந்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் அனைத்து நோயாளிகளுக்கும் பழங்கள் உட்பட ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகள் நகரச் செயலாளர் கதிரேசன் ஒன்றிய தகவல் தொழில்நுட்பப்பிரிவு காதர் மைதீன் ஒன்றிய இளைஞரணித்துணைச் செயலாளர் செந்தில் குட்டி உட்பட ஏராளமான திமுக-வினர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )