நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர்கள் முத்திரை அளவீடு துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அதில் எடை குறைவான தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் உத்தரவின் பேரில் திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் சிவசிந்து அறிவுரையின்படி பழனி தொழிலாளர் துணை ஆய்வாளர் மனோஜ் சியாம் சங்கர் தலைமையில் நிலக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் செந்தில் ஆண்டவன்,
நிலக்கோட்டை முத்திரை ஆய்வாளர் விஜயராகவன் பழனி முத்தரை ஆய்வாளர் ராஜமுருகன், பழனி உதவி ஆய்வாளர் நக்ருதீன் பானு,,பழனி சரக உதவியாளர் சுந்தரம் மற்றும் பணியாளர்களுடன் நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 இன் கீழ் எடைளவு முத்திரை தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
துறையினரின் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முத்திரையிடப்படாத எடை அளவுகள் மற்றும் தராசுகள் இடைகற்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிய காலத்திற்குள் மறு முத்திரை இட்டுக் கொள்ளுமாறும் வணிகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதிகாலை முதல் பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திடீரென தராசு ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் ம.ராஜா.
