BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் மருத்துவமனையில் இருந்த நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரின் வேட்புமனுவை வாபஸ் பெற திமுகவினரின் நெருக்கடியால் கணவர் மற்றும் அவரது அண்ணன் கட்டாயப்படுத்தி அழைத்து வந்த காரை நாம் தமிழர் கட்சியினர் சிறைப்பிடித்ததால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 வது வார்டில் (பெரிய பேட்டை பகுதியில்) நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் சோனியா என்பவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கணவர் செல்வமணியுடன் கடந்த 4 நாட்களாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பெண் வேட்பாளர் சோனியாவின் வேட்பு மனுவை வாபஸ் பெற அவரது கணவர் செல்வமணி மற்றும் கணவரின் அண்ணன் கானா முருகன் மூலம் திமுகவை சேர்ந்த மா. ப. சாரதி மற்றும் திமுக நகர பொறுப்பாளர் சாரதி குமார் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பொல்லு என்கின்ற வெங்கடேசன் ஆகியோர் செல்போன் மூலம் கணவர்.

செல்வமணிக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், இதனால் கணவர் வாடகை கார் மூலம் வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்த தன்னை நீ மனுவை வாபஸ் பெறவில்லை என்றால் என்னுடன் வாழ முடியாது என கட்டாய படுத்தி வேலூர் மருத்துவமனையில் இருந்து செல்வமணியின் அண்ணன் கான முருகனுடன் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு காரில் அழைத்து வந்தபோது நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் காரை முற்றுகையிட்டு அவரை சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜிடம் தமிழர் கட்சி வேட்பாளர் சோனியா செல்போன் மூலம் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார் அதேபோல் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தார் இதனால் நகராட்சி அலுவலகம் முன்பாக சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )