BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் பண்ணைபுரம் கோம்பை ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கான வாக்கு எண்ணும் மையம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் பண்ணைபுரம் கோம்பை ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கான வாக்கு எண்ணும் மையம் கோம்பை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது அங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளிதரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறை, கணினி அறை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்தள வசதி ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முத்துக்குமார் உடனிருந்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )