BREAKING NEWS

வேலூரில் தனது 32 வது ஹோட்டலைத் திறப்பதன் மூலம் தென்னிந்தியாவில் தனது இருப்பை விரிவுபடுத்துகிறது ‘கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ்’

வேலூரில் தனது 32 வது ஹோட்டலைத் திறப்பதன் மூலம் தென்னிந்தியாவில் தனது இருப்பை விரிவுபடுத்துகிறது ‘கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ்’

வேலூர் மாவட்டத்தில் தென்னிந்தியாவில் தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்து, ‘கிராண்ட் கான்டினென்ட் ஹோட்டல்ஸ்’ நிறுவனம் வேலூரில் ‘கிராண்ட் கான்டினென்ட் பிரீமியர்’ என்ற 32-வது ஹோட்டலை தொடங்கியது. நியூ பைபாஸ் சாலையிலுள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள இந்த 50 அறைகள் கொண்ட ஹோட்டல், வணிகம், மருத்துவம், கல்வி மற்றும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

CMC, VIT உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மற்றும் ராணிப்பேட்டை தொழில் மையத்திற்கு அருகாமையில் உள்ளதால், இந்த ஹோட்டல் பயணிகளுக்கு வசதியான இடமாக அமைகிறது.

நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரமேஷ் சிவா கூறுகையில், வேலூர் வளர்ந்து வரும் முக்கிய சந்தையாக இருப்பதால், தரமான தங்குமிட வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த ஹோட்டலில் டீலக்ஸ் அறைகள், குடும்ப அறைகள், 80 இருக்கைகள் கொண்ட உணவகம், பார் மற்றும் 200 பேர் வரை அமரும் மாநாட்டு அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

நிறுவனம் தற்போது 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் 32 ஹோட்டல்கள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட அறைகளுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS