அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை.

அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக் கும் ஒரு ஆசான் தேவை. அவர்கள் தேவர் களாக இருந்தாலும், அசுரர்களாக இருந் தாலும் அவர்களுக்கு இது சரி, இது தவறு என அறிவு புகட்ட ஒரு ஆசான் தேவை.
தான் அறிந்த மற்றும் அனுபவ ரீதியான பல விஷயங்களை உணர்ந்த ஆசான், தான் கற்ற தை தன்னிடம் மட்டுமே வைத் துக்கொள்வது இல்லை. அதை தன்னை நம்பி வந்த மாணவ ர்களுக்கும் கற்று கொடுக்கிறார்கள்.
தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதி நேர த்தை நாளைய சமுதாயம் நன்றாக அமையும் பொருட்டு, பல அனுபவ ரீதியா ன உணர்வுகள் மற்றும் அறிவு பூர்வமான கதைகள் மூலம் எதுவும் அறியாத மாணவ செல்வங்களுக்குபுகட்டும் ஒரு உன்னதமா ன மாமனிதரே ஆசான் என்று சொல்லக் கூடிய ‘குரு” ஆவார்.
குரு தனது மாணவர்கள் அழிந்து போகக் கூடி ய எந்த ஒரு செயலையும் கற்பிப்பது இல்லை. மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் இரு ப்பது போல் குருவிலும் இரண்டு மனிதர்கள் உள்ளனர்.
ஒருவர் தேவர்களுக்கு தகுந்த அறிவுரைக ளை கூறி, வழி நடத்தும் தேவ குருவாகிய பிரகஸ்ப தி என்னும் குருவும், அசுரர்களுக் கு குருவாகி அவர்களை வழி நடத்தும் சுக்கிராச்சாரியார் என்னும் அசுர குருவும் ஆவார். கற்பித்தல் மூலம் அடுத்த தலைமு றைகளை நல்வழிப் படுத்தும் பணியில் உள்ள ஆசானாகிய குரு பகவானை (பிரகஸ்பதி) பற்றி பார்ப்போம்.
குருவின் வரலாறு :
படைத்தல் தொழிலை மேற்கொண்ட பிரம்மன், படைத்தலுக்கு உதவியாக சப்த ரிஷிகளை உருவாக்கினார். இவர்களின் மூலமாக தான் அசுர – மானிட இனங்கள் தோன்றின. இந்த ரிஷிகளில் ஆங்கிரீஸர் என்பவரும் ஒருவர்.
ஆங்கிரீஸர் என்ற ரிஷிக்கு மூன்று புதல்வ ர்க ள் தோன்றினார்கள். அவர்களில் ஒரு வர்தான் வியாழன் என்னும் பிரகஸ்பதி ஆவார். இவர் பின்னாளில் தேவர்களுக்கு குருதேவர் ஆன தால் குருபகவான் என்ற பெயரைப் பெற்று தேவர்களை நல்முறை யில் நடத்தினார்.
குருபகவான் நவகிரக பரிபாலனத்தில் மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டவர்.
புராண காலத்தில் தேவர்களுக்கு இந்திர னாக வேண்டும் என்றால் நூற்றுக்கு மேற் பட்ட அசு வமேத யாகம் செய்து, அந்த யாகங்களை சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் செய்ய வேண்டும். அதில் சிறந்தவர்கள் மட்டுமே இந்திரன் என்னும் தேவவேந்திரனாக முடியும் என்ற வரலாறு உண்டு.
அதேபோல் நால்வகை வேதங்களையும் கற்று உணர்ந்து, பல கலைகளையும் அறி ந்து மற்றும் பல யாகங்கள், ஹோமங்கள் செய்து அதில் சிறப்பானவர்கள் மட்டுமே தேவர்களின் குரு என்னும் அந்தஸ்தை பெற முடியும். குருதேவர் அந்தஸ்தை பெற் றவர்கள் தான் கற்ற வேதங்களை பிறருக் கு உபதேசிக்கும் தகுதியை பெறுகிறார்.
இவ்வகையில் நால்வகை வேதங்களை யும் சிறப்புற கற்று, பலகலைகளை அறி ந்த பிரக ஸ்பதி எனும் ஆங்கிரீஸ ரிஷயின் புதல்வன் தேவர்களுக்கு குருவாகினார்.
ஆசிரம வாழ்க்கை :
தேவர்களுக்கு குருவான பிரகஸ்பதி ஆசி ரமம் அமைத்து தான் கற்ற வேதங்களை மற்றவர்க் கு உபதேசம் செய்து வந்தார்.
இல்லற வாழ்க்கை :
உலகத்தில் உயிர்கள் தோன்ற வேண்டும் என்பதற்காக ரிஷிகள், முனிவர்கள் பிரம் மசா ரிகளாக மட்டும் இல்லாமல் இல்லறத் தில் ஈடு பட்டு இல்லற வாழ்க்கையில் எப் படி இருத்தல் வேண்டும் மற்றும் மனைவி யை எவ்வாறு மதித்து நடத்துதல் வேண்டு ம் என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்.
இல்லறத்தில் ஈடுபட்டாலும் துறவு வாழ்க் கை யான தவம், யோகம் மற்றும் தியானம் போன்றவைகளையும் முறையாக செய்து வந்தார்கள். அதேபோல தேவர்களின் குரு வான பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவாகி அவர்களை வழி நடத்துவது மட்டுமல்லாம ல் தாரை என்னும் தாராதேவியுடன் இல்ல றத்தில் ஈடுபட்டு, அவரிடம் கற்க வந்த மா ணவர்களுக் குட் நால்வகை வேதங்களை யும் உபதேசித்தார்.
குரு பகவானின் இயல்புகள் :
இவர் மஞ்சள் நிறத்தை தன்னகத்தே கொ ண்ட வர். கரிய கதிருடன் குருவின் மஞ்ச ள் ஒளி சேர்ந்தால் தான் உலகில் உயிரின் உற்பத்தி மேம்படும்.குரு புத்தி காரகன். மூளையின் செயல்பா ட்டி ற்கு அதிபதியும் இவரே. இவர் பெருந் தன்மை யான குணத்தை கொண்டவர்.
குருவின் காயத்ரி மந்திரம் :
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்.
