BREAKING NEWS

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகம் விழா மற்றும் யாகசாலை பூஜை

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகம் விழா மற்றும் யாகசாலை பூஜை.

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகம் விழா மற்றும் யாகசாலை பூஜையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வி. நாச்சியார்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புளியடி சக்கரத்தாழ்வார் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் கோவில்பட்டி சுபா நகர் பகுதியிலுள்ள ஸ்ரீ ஐஸ்வரிய வீரலட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில் நரசிம்மப் பெருமாள் ஜெயந்தி விழா முன்னிட்டு யாகசாலை பூஜை சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, வினோபாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன்,அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )