BREAKING NEWS

திருச்சியில் சுமார் 700 பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றிய நிதி நிறுவனம்

திருச்சியில் சுமார் 700 பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றிய நிதி நிறுவனம்.

திருச்சியில் சுமார் 700 பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றிய நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு.

சேலத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் 93 கிளைகள் உடன் அமுதசுரபி நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கிளையான
அமுதசுரபி நிதி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் துவக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தினசரி சேமிப்பு திட்டத்தின் கீழ் தினக்கூலிகள், நடுத்தர மக்களை தங்களிடம் பணம் செலுத்தினால் செலுத்தும் பணத்திற்கு கூடுதலாக 1000ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதை நம்பி திருச்சியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவர்களிடம் பணம் செலுத்தியுள்ளனர் ஆரம்ப காலத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு 100 சதவீதம் பணத்தை திருப்பி செலுத்தி உள்ளனர்.


இந்த நம்பிக்கையின் பெயரில் பணம் செலுத்தியவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் இதில் இணைத்துள்ளனர்.
இப்படி கடந்த மூன்று வருடங்களாக சுமார் 700-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அமுதசுரபி அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளதாகவும் தகவலறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. எனவே, பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )