திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு எடுக்க உண்ணாவிரத போராட்டம்
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வலியுறுத்தி துப்பாக்கி தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்சி அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வலியுறுத்தி துப்பாக்கி தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த 2019 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150 பேர் 18 ஆண்டுகளாக துப்பாக்கி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புறவு உள்ளிட்ட வேலைகள் பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு புதிதாக காண்ட்ராக்ட் எடுத்த மனோன்மணி என்ற ஒப்பந்த நிறுவனம் பழைய தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது.
அதனைத் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டுமென கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதற்கு ஒப்பந்த நிறுவனமும், துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்த மனோன்மணி நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
தற்பொழுது புதிதாக வரும் காண்ராக்ட் நிறுவனமானது பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மே 1 தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்,

இந்த நிலையில் இது சம்பந்தமாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என காவல்துறையினர் கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் நேற்று திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் பெரியசாமி தலைமையில் துப்பாக்கி தொழிற்சாலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
