BREAKING NEWS

வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள்

வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள்.

வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.


மயிலாடுதுறை மாவட்டம் வருவாய் தீர்வாயத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் 47 மனுக்களும், சீர்காழி வட்டத்தில் 80 மனுக்களும், தரங்கம்பாடியில் 30 மனுக்களும், குத்தலாம் வட்டத்தில் 50 மனுக்களும் ஆக மொத்தம் 4 வட்டங்களிலும் 207 மனுக்கள் பெறப்பட்டு உரிய விசாரனைக்கு பின் தீர்வு காணப்படும். குறிப்பாக இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம். பட்டா பெயர் மாற்றம், ஆகியவை தொடர்பாக பெருபான்மையான மனுக்கள் பெறப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தகவல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தீர்வாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேலும் தெரிவித்ததாவது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 17.05.2022 முதல் 01.06.2022 வரை 1431-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது. அதன்படி மயிலாடுதுறை வட்டத்தில் இன்று 17.05.2022 திருச்சிற்றம்பலம், கடலங்குடி. முடிகண்டநல்லூர், மணல்மேடு. கிழாய், கெசிங்கன், ஆத்தூர். பூதங்குடி, நமச்சிவாயபுரம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இன்று முதல் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து ஜமாபந்தியின் நிறைவு நாளில் தீர்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்படும். நாளை (18.05.2022) மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காளி-1, காளி-2, ஐவநல்லூர். தாழஞ்சேரி, கொற்கை, பாண்டூர். திருமங்கலம், முருகமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. தொடர்ந்து நாளை கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்படும் அ பதிவேடு. அ பதிவேட்டின் உள்ளடக்கம், பயிராய்வு கணக்கு, அடங்கல், மரப்பதிவேடு, பட்டா மாறுதல், பல்வகை வருவாய், கிராம வரி வசூல் கணக்கு, பட்டா வாரியான வசூல் பதிவேடு, நில வருவாய் ரசீது, பிறப்பு இறப்பு பதிவேடு. மழை பொழிவு பதிவேடு. கிராம புள்ளியல் பதிவேடு போன்ற பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றவா என ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் (17.05.2022) சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பின்னர், வருவாய் தீர்வாயத்தில் மனு வாங்கிய 10 பயணாளிகளுக்கு உடனடியாக மின்னணு குடும்ப அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

வருவாய் தீர்வாயத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் 47 மனுக்களும், சீர்காழி வட்டத்தில் 80 மனுக்களும், தரங்கம்பாடியில் 30 மனுக்களும், குத்தலாம் வட்டத்தில் 50 மனுக்களும் ஆக மொத்தம் 4 வட்டங்களிலும் 207 மனுக்கள் பெறப்பட்டு உரிய விசாரனைக்கு பின் தீர்வு காணப்படும். குறிப்பாக இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், ஆகியவை தொடர்பாக பெருபான்மையான மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், உதவி இயக்குநர் (நிலஅளவை) சௌந்தரராஜன், அலுவலக மேலாளர் (பொது) முருகேசன், மயிலாடுதுறை வட்டாட்சியர் ர.மகேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.சுகன்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, பல்வேறு கிராம வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )