BREAKING NEWS

பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்!

பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்!

தருண்

’அம்மாவைத் திட்டும் போது, நான் எப்படிப்பா உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்? எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம். இனி மேலாவது சண்டைப் போடாம சந்தோஷமா இருங்க’  என்று சதா சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோரைச் சேர்த்து வைக்க, தன்னுடைய உயிரை பணயமாக வைத்து தற்கொலை செய்துள்ளார் +2 மாணவன் தருண். பிரிந்து போன தன்னுடைய தாயும் தந்தையும் மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமாக எழுதி வைத்து விட்டு பிளஸ் 2 படிக்கும் மகன் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நாமக்கல், ராசிபுரம் பகுதியில் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாரைக் கிணறு பிரிவு பகுதியில் விவசாயம் பார்த்து வருபவர் ரவி. இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நர்மதா என்ற மகளும், 17 வயதான தருண் என்ற மகனும் உண்டு. ரவி முன்னர் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது விவசாயம் செய்து வருகிறார்.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

இவரது மகன் தருண் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவியும் அவரது மனைவி மேகலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாயும், தந்தையும் பிரிந்துவிட்டதால் தருண் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது நண்பர்களிடம் அடிக்கடி புலம்பியதாக கூறப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பள்ளியின் ஆசிரியர் தற்கொலை- Dinamani

இந்நிலையில் தருண் இரவில் திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தருணின் குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது தருண் தூக்கில் பிணமாக தொடங்கியதைக் கண்டு துக்கத்தில் கதறி அழுது துடித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் தருணின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தருண் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதனை படிக்க படிக்க நெஞ்சம் உருகிப்போகிறது. கடிதத்தில், என் சாவிலாவது நீங்கள் இணைய வேண்டும் அம்மா… அப்பா’’ என்று எழுதி உள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.பிரிந்து போன தாய், தந்தையை சேர்த்து வைப்பதற்காக தருண் தூக்கு போட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )