BREAKING NEWS

தஞ்சாவூர் காணாமல் போன சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு

தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை காணாமல் போன சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 ஆன்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் களவு மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021 மற்றும் 2022-ம் வருடத்தில் காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் மற்றும் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, I.P.S., உத்தரவின்படி களவாடப்பட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைவாக கண்டுபிடிக்க இதில் தனிக்கவனம் செலுத்திய காவல் துறையினர் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் விரைந்து செயல்பட்டு சுமார் ரூ. 15 லட்சம் மதிப்புடைய 110 மார்ட் செல்போன்களை மீட்டுள்ளனர்.இதனை இன்று 17.05.2022-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன் ஒப்படைக்கும் நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் D.சுவாமிநாதன் உரிய புகார் மனுதாரர்களிடம் செல்போனை வழங்கியும் மேலும் செல்போனை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்தும் மற்றும் தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு வழங்கியும், பண இழப்பு ஏற்படும் சைபர் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும், மற்ற சைபர் குற்றங்களுக்கு புகார் அளிக்க வேண்டிய www.cybercrime.gov.in என்ற இணையதளம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் S.கார்த்திகேயன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவேல், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் செல்போனை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். விரைவாக செயல்பட்ட காவல்துறையினரை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )