BREAKING NEWS

பிரதமர் மோடி குவாட் அமைப்பின் மூலம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது – பழ நெடுமாறன்

பிரதமர் மோடி குவாட் அமைப்பின் மூலம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது – பழ நெடுமாறன்.

ஈழப்பிரச்சனை தீர்வில் தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்பதால் பிரதமர் மோடி குவாட் அமைப்பின் மூலம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என பழ நெடுமாறன் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது மேதகு 2 திரைப்படத்தின் பாடல்களை உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ நெடுமாறன் வெளியிட தொடர்ந்து மெழுகு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் இலங்கையின் முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பழ.நெடுமாறன் அளித்த பேட்டியில் தற்போது ஈழத் தமிழர் பிரச்சனை என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அறைகூவல் விடும் பிரச்சனையாக உருவெடுத்து விட்டது இலங்கையில் சீனா முழுமையாக காலூன்றி உள்ளது இது இந்தியாவிற்கு மட்டுமின்றி தென் ஆசிய நாடுகளுக்கே ஆபத்தானது இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகள் அமைத்த குவாட் கூட்டணியில் இந்தியா இணைந்திருக்கிறது தற்போது உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி இந்திய பிரதமர் மோடி குவாட் மூலமாக இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது இதில் பிரதமர் மோடி தலையிட்டு இந்திய பாதுகாப்பிற்கு வந்திருக்கக் கூடிய அபாயத்தை தடுப்பதோடு ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு வழி பிறக்கும் ஈழத்தமிழர் பிரச்சனை தீர்வு உள்ளது இந்தியாவின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது என்பதை டெல்லியில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )