BREAKING NEWS

உடுமலையில் நகராட்சி ஊழியர் தற்கொலை.

உடுமலையில் நகராட்சி ஊழியர் தற்கொலை.

உடுமலை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (69) நகராட்சி பிளம்பராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தங்களது தந்தையை காணவில்லை என மகன்கள் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் அந்த வழியாக நடைபயிற்சி மேற் கொண்டவர்கள் சடலம் மீட்பு மிதப்பதைக் கண்டு உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தனபால் சடலத்தை மீட்டனர் .

இதுகுறித்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா எஸ்ஐ சண்முகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தனபால் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )