BREAKING NEWS

1 லட்சம் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு!

1 லட்சம் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு!

1 லட்சம் கார்னேசன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு!

நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான மலர்க்காட்சி இன்று தொடங்கியது. காட்சியின் சிறப்பம்சமாக 1 லட்சம் கார்னேசன் மலர்களால் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு வடிவமைக்கப்பட்டது.

சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இதில் முக்கியமாக ரோஜா காட்சி, மலர்க்காட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவை அடங்கும்.

உதகை மலர்க்காட்சி உலக பிரசித்தி பெற்றது என்பதால் மலர்க்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். மலர்க்காட்சி நடக்கும் நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மலர்க்காட்சி கண்டு ரசித்து செல்வார்கள். இந்தாண்டு 124-வது மலர்க்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்கின்றன. காட்சியின் சிறப்பம்சமாக 1 லட்சம் கார்னேசன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு வடிவமைக்கப்பட்டது.

மேலும், 124வது மலர்காட்சி அலங்காரம் 20 ஆயிரம் மலர்களாலும், பழங்குடியினர் 20 ஆயிரம் மலர்களாலும், ‘ஊட்டி 200’ 10 ஆயிரம் மலர்களாலும், மஞ்சப்பை 2 ஆயிரம் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததது.

இந்நிலையில், 20 ஆயிரம் வில்லியம்ஸ் மற்றும் கொய்மலர் மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் கடந்த 5 நாட்கள் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை குறைந்ததால் தோட்டக்கலைத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )