பெண் போலீஸ் தற்கொலை முயற்சி! காவலர் குடியிருப்பில் பரபரப்பு!
பெண் போலீஸ் தற்கொலை முயற்சி! காவலர் குடியிருப்பில் பரபரப்பு!

சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாபுஜி. பூந்தமல்லி போக்குவரத்து காவலராக பணி புரிந்து வரும் இவருக்கு பானுமதி என்ற மனைவி உள்ளார். இதே குடியிருப்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணி புரிந்து வரும் அமுதா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் குடியிருப்பின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது பானுமதி தண்ணீரை கீழே ஊற்றியுள்ளார். அதில் ஒரு சிறுவன் வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமுதா பானுமதியை தட்டி கேட்ட போது இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது. இதனால் கோபமடைந்த பானுமதி அமுதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மன உளைச்சலில் இருந்த அமுதா, வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
