நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல்!! களைகட்டும் மாநிலங்களவைத் தேர்தல்!!
நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல்!! களைகட்டும் மாநிலங்களவைத் தேர்தல்!!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதன்படி, நாளை மே24 முதல் மே 31ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் . தமிழகத்தை பொறுத்தவரை 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 ல் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 22-ம் தேதி முடிகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக எம்பிக்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 22-ம் தேதியுடன் முடிகிறது.இதனால் ஏற்படும் காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையொட்டி மே 24ம் தேதி நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. நாளை முதல் மே 31ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந் தேதி ஆகும்.இந்நிலையில், தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழக சட்டப்பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் மே 24-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881-ம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள மே 28 (வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை) மற்றும் மே 29 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
