BREAKING NEWS

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வான் நோக்கும் நிகழ்ச்சி.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வான் நோக்கும் நிகழ்ச்சி.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக உடுமலை செல்லம் நகரில் வான் நோக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் நட்சத்திரத் தொகுதிகள் பற்றியும், நட்சத்திரங்களின் வகைகள் பற்றியும் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கப்பட்டது. நிலவின் தன்மைகள் பற்றியும், நிலவுக்கு இந்திய விண்வெளி துறையின் சார்பாக அனுப்பப்பட்ட சந்திராயன் செயற்கைக்கோள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக தொலைநோக்கி வழியாக நட்சத்திரங்களையும் நட்சத்திரத் தொகுதிகளையும் பார்த்து ரசித்தனர். நிகழ்வினை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதன் தொடர்ச்சியாக ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )