சுவற்றில் துளையிட்டு ரூ. 75 லட்சம் நகைகள் , ரொக்கப்பணம் கொள்ளை!! வேலூரில் பரபரப்பு!!
சுவற்றில் துளையிட்டு ரூ. 75 லட்சம் நகைகள் , ரொக்கப்பணம் கொள்ளை!! வேலூரில் பரபரப்பு!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கூட்டுரோட்டில் நகை அடகு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை மேல்பாடியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நடத்தி வந்துள்ளார். அனில்குமார் நேற்று வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த கடையை ஒட்டி ஜூஸ் கடை, ஏ.டி.எம் என வரிசையாக கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு பின்னால் வெற்று காலி இடம் உள்ளது. நேற்றிரவு அனில்குமார் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றார் . நள்ளிரவில் மர்ம நபர்கள் அடகு கடையின் பின்னால் இருந்து சுவற்றை துளையிட்டுள்ளனர்.

அடகு கடையின் சுவர் கான்கிரீட்டை உடைக்க முடியவில்லை. இதனையடுத்து அடகு கடையின் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவரை துளையிட்டு அடகு கடைக்குள் சென்றனர். ஜூஸ் கடைக்குள் இருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு அடகு கடையின் லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் 90 பவுன் தங்க நகை, 30 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்தனர். அத்துடன் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.35 லட்சம் மதிப்பிலான நகைகளையும் கொள்ளையடித்தனர். அடகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டனர்.
இதனால் தடயங்களையும் முற்றிலுமாக அழித்துவிட்டனர். இரும்பு கம்பி மற்றும் அறம் போன்றவற்றை பயன்படுத்தி லாக்கரை உடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இன்று காலை வழக்கம் போல் கடைக்கு வந்த அனில்குமார் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்செய்திருக் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேமராவை உடைத்து எடுத்துச் சென்றதால் அடையாளம் தெரிந்தவர்கள் யாராவது தான் இந்த வேலையை க வேண்டும் என போலீசார் சந்தேகத்துள்ளனர். தங்களை எளிதில் அடையாளம் தெரிந்துவிடும் என்பதால் கேமராவை எடுத்து சென்று இருக்கலாம் எனத் தெரிவிள்ளனர்.

அடகு கடையில் சுவற்றில் துளையிட்டு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த்துத சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள சாலையில் நகை அடகு கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
