செங்கம் அருகே இருளர் இன மக்களுக்கு வழியில்லாமல் வீட்டுமனை பட்டா வழங்கபட்டதை கண்டித்து அரசு அதிகாரி வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு குடியிருக்க வீடு இன்றி தவித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டு அவர்களுக்கு 10 வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பசுமை வீடுகள் பணி ஆணை வழங்கியுள்ளது.
ஆனால் வீடுகளுக்கு சென்று வர வழி இல்லாமல் மற்றவர்கள் நிலத்தின் மீது சென்று வரும் அவல நிலை உள்ளதால் அப்பகுதி இருளர் இன மக்கள் தனது விவசாய நிலத்தில் செல்ல அனுமதிக்காமல் எதிர்ப்பு தெரிவிப்பதால் வழியில்லாமல் வீட்டுமனை தந்த அரசு அதிகாரிகளை கண்டித்து இருளர் இன மக்கள் வட்டாட்சியர் வாகனம் வந்த வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டு தங்களுக்கு வழி பாதை அமைத்து தரப்படும் என உறுதியளித்த பின்னர் சாலை மறியல் தை விட்டுச் சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
