BREAKING NEWS

டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் அரசுப் பணிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம்  பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.

TNPSC குரூப் 1 ரிசல்ட் வெளியீடு!!
தமிழகத்தை பொறுத்தவரை இனி நடத்தப்படும்  அனைத்து வகையான போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ்த் தாள் தேர்வு இடம்பெறும்.

அதில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த  அறிவிப்பு செயல்பாட்டுக்கும் வந்துள்ள நிலையில், தற்போது அதில் இருந்து குறிப்பிட்ட சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பு மற்றும் அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி  இந்த உத்தரவிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளதாக  புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக்குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடுகள், நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகள், பன்முகக் குறைபாடுகள் என்று 8 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், 40 சதவிகிதத்துக்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கும், கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து அரசாணை வெளியிட்டுள்ளது.விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )